வணிகம்

முடிதிருத்தத் தொழிலில் கால்பதிக்கும் அமேசான்!

DIN

இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் லண்டனில் சலூன் கடையைத் திறக்கவுள்ளது. இதன் மூலம் முடித்திருத்தும் தொழிலிலும் அமேசான் கால்பதிக்கவுள்ளது.

லண்டன் நகரின் பிரஷ்ஃபீல்ட் தெருவில் தமது முதல் சலூன் கடையை அமேசான் நிறுவனம் அமைக்கவுள்ளது. 1,500 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களைக் கொண்டவகையில் பிரம்மாண்டமாக அமையவுள்ளது.

வாடிக்கையாளர்கள் விரும்பும்படி துல்லியமாக முடிதிருத்தம் செய்ய 'அகுமேட்டட் ரியாலிட்டி' போன்ற செயலி தொழில்நுட்பங்களையும் சலூன் கடையில் பயன்படுத்தவுள்ளது. 

இதன்மூலம் முடிதிருத்தம் செய்துகொள்ள வருபவர்கள் எந்தவகையான சிகையலங்காரங்களை விரும்புகின்றனர் என்பதை முன்கூட்டியே துல்லியமாக அறிந்துகொள்ள இயலும்.

மேலும், அழகுசாதன பொருள்கள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய மென்திரை இயங்கும் என்றும், அதில் தேவையான பொருள்களை கியூஆர் கோடை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக அமேசானில் உள்ள ஊழியர்களுக்காக மட்டுமே அமேசான் சலூன் செயல்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT