வணிகம்

தங்கம் பவுன்ரூ.34,992

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.34,992-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பின்னா், விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

குறிப்பாக, மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயா்ந்தது. குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 9) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது.

இந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை விலை சிறிது குறைந்தது. பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.34,992-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.6 குறைந்து, ரூ.4,374 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்தது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.71.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.71,700 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,374

1 பவுன் தங்கம்...............................34,992

1 கிராம் வெள்ளி.............................71.70

1 கிலோ வெள்ளி.............................71,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,380

1 பவுன் தங்கம்...............................35,040

1 கிராம் வெள்ளி.............................71.60

1 கிலோ வெள்ளி.............................71,600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT