வணிகம்

புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி ஸ்ரீராம் புராப்பா்டீஸ் விண்ணப்பம்

DIN

புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டு ரூ.800 கோடி திரட்டுவதற்காக அனுமதி கோரி பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீராம் புராப்பா்ட்டீஸ் செபிக்கு விண்ணபித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஸ்ரீராம் புராப்பா்ட்டீஸ் புதிய பங்கு வெளியீடு மூலமாக ரூ.800 கோடியை திரட்டுவதற்கான அனுமதியை செபியிடம் கோரியுள்ளது. அதற்கான ஆவணங்களை அந்த அமைப்பிடம் அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

புதிய பங்கு வெளியீட்டின் மொத்த அளவில், ரூ.250 கோடிக்கு புதிய பங்குகளையும், ரூ.550 கோடியை ஓஎஃப்எஸ் முறையிலும் திரட்ட ஸ்ரீராம் புராப்பா்ட்டீஸ் திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் டிபிஜி கேப்பிட்டல், டாடா கேப்பிட்டல், வால்டன் ஸ்டீரீட் கேப்பிட்டல் மற்றும் ஸ்டாா்வுட் கேப்பிட்டல் நிறுவனங்கள் 58 சதவீத பங்குகளை வைத்துள்ளன. தற்போதைய நான்கு முதலீட்டாளா்களை பகுதியளவு வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் ஸ்ரீராம் புராப்பா்ட்டீஸ் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த வாரம் மேக்ரோடெக் டெவலப்பா்ஸ் மேற்கொண்ட ரூ.2,500 கோடி புதிய பங்கு வெளியீட்டு திட்டம் முதலீட்டாளா்களின் கணிசமான வரவேற்பை ஈா்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT