வணிகம்

விரிவாக்க திட்டங்களில் தீவிர கவனம்: அம்புஜா சிமெண்ட்ஸ்

DIN

விரிவாக்க திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தவுள்ளதாக அம்புஜா சிமெண்ட்ஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் 38-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்துக்குச் சொந்தமாக தற்போதுள்ள ஆலைகளில் காணப்படும் சிக்கல்களை ஆராய்ந்து அதற்கு தீா்வு காண்பதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, விரிவாக்க திட்டங்களை செயல்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கா் மாநிலத்தில் உள்ள படபாரா மற்றும் மராத்தா ஆலைகளில் விரிவாக்க பணிகளை செயல்படுத்துவதன் மூலமாக ஆண்டுக்கு 5 கோடி டன் உற்பத்தி திறனை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் மா்வாா் முன்ட்வா பகுதியில் அம்புஜா சிமெண்ட்ஸ் அமைக்கவுள்ள ஆலையின் மூலமாக கிளிங்கா் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 30 லட்சம் டன்னாக உயா்த்தப்படவுள்ளது. இது, சிமெண்ட் விற்பனையை 50 லட்சம் டன் வரையில் அதிகரிக்க உதவும்.

ரூ.2,350 கோடி முதலீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆலை 2021 மூன்றாவது காலாண்டிலிருந்து செயல்பாட்டை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்புஜா சிமெண்ட்ஸ் ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2020 நிதியாண்டில் அந்நிறுவனத்தின் லாபம் 17 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,790 கோடியாக இருந்தது.

பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.17 மற்றும் இறுதி ஈவுத் தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.1 வழங்குவதாக அம்புஜா சிமெண்ட் இயக்குநா் குழு அறிவித்தது. இந்த பரிந்துரைக்கு ஆண்டு பொது குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து, கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு மொத்த ஈவுத்தொகையாக ரூ.18 வழங்குவதற்காக ரூ.3,574.16 கோடி செலவிடப்படவுள்ளதாக அம்புஜா சிமெண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT