வணிகம்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் 100ஜிபி-க்கு மேல் நினைவகம்

DIN

ஸ்மார்ட்போன்களுக்கான சராசரி நினைவகத் திறன் 100ஜிபியைத் தாண்டியுள்ளது. 

அதிக திறன் கொண்ட கேமரா மற்றும் பயன்படுத்தப்படும் செயலிகளின் அளவு அதிகரித்ததே ஸ்மார்ட்போன்களின் நினைவகத்திறனை அதிகரிப்பதற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது.

ஐஓஎஸ் இயங்குதளம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான நினைவகத் திறனில் அதிக அளவு வேறுபாடுகள் உள்ளன.

ஐஓஎஸ் இயங்குதள ஸ்மார்ட்போன்களின் நினைவகம் கடந்த 2020-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 140.9GB-ஆக இருந்தது. ஆனால் இதே காலாண்டில் ஆண்டிராய்டு இயங்குதள ஸ்மார்போன்களின் நினைவகம் 95.7GB-ஆக இருந்தது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் நினைவகம் அதிகரித்து வந்துள்ளது இதன் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. 2020-ம் ஆண்டில் ஆண்ட்ராய்டு நினைவக திறன் 20.5% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களின் நினைவக திறன் 5.6% மட்டுமே அதிகரித்துள்ளது.

ஐஓஎஸ் இயங்குதளமான ஆப்பிள் நிறுவனம், 2018-ம் ஆண்டு முதல் 512GB நினைவகத்தைக் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அதன்பிறகு நினைவகத் திறனை விரிவாக்கம் செய்யும் பணிகளை அந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை.

ஆனால், மிகப்பெரிய ஆண்ட்ராய்டு இயங்குதளமான சாம்சங், ஸ்மார்ட்போன்களின் நினைவகத் திறனை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

2019-ன் முதல் காலாண்டு முதல் 2020-ன் நான்காம் காலாண்டுவரை ஸ்மார்ட்போன்களின் நினைவகத் திறன் 20.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2019-ல் 80.7GB-யிலிருந்து 2020-ல் 97.11GB ஆக அதிகரித்துள்ளது. எனினும் ஐஓஎஸ் இயங்குதள ஸ்மார்ட்போன்களின் நினைவகத் திறன் இதேகாலகட்டத்தில் 5.6 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

மேலும், இதேகாலகட்டத்தில் அதிக நினைவகத் திறன் (256GB மற்றும் 512GB) கொண்ட ஐஓஎஸ் இயங்குதள ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் சரிந்தே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT