வணிகம்

புற்றுநோய் பாதித்த 12 வயது சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்

DIN

 
குணா ஒவ்வொரு முறை சிகிச்சையை மேற்கொள்ளும் போதும் அம்மா என் உடல் மிகவும் வலிக்கிறது. இந்த வேதனையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தயவு செய்து இதனை நிறுத்திடுங்கள்" என அழுது கொண்டேயிருக்கிறான்.

என் 12 வயது மகன், பல மாதங்களாக இந்த வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு அனைத்து வித சௌகரியங்களையும் செய்து தர வேண்டும். எப்போது ஓர் குழந்தைக்குத் தாயின் அரவணைப்பு தேவைப்படுகிறதோ அப்போது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என எனது இந்த கையறு நிலையை எண்ணி மனம் உடைந்து போகிறேன். என் குழந்தையின் வலியைப் போக்க என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் குணாவிற்கு Anaplastic Large Cell Lymphoma எனும் அறிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதுவரை புற்று நோய் என்பது உயிர்க்கொல்லி நோய் என்பதாகவே நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் மருத்துவர்கள் தான் புற்றுநோய் குணப்படுத்தக் கூடிய நோய் தான் என்பதை எங்களுக்கு உணர்த்தினர். ஆனால் எங்களுக்கு அந்த நற்செய்தி வெகு நேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் கீமோ தெரப்பி மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கும் 12,25000 ரூபாய் செலவாகும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 

குணாவுக்கு அதிக காய்ச்சல் வந்ததும் இது தொடங்கியது. நாங்கள் அவரை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர் பரிந்துரைத்த மருந்துகள் உடல் நலத்தைச் சீராக்கவில்லை. மாறாக, குணாவின் கழுத்தில் ஒரு கட்டி வளர ஆரம்பித்தது. இது அவனுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது, எனவே நாங்கள் அவனை மீண்டும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவர் சில சோதனைகளை மேற்கொண்ட பின் அவனுக்கு புற்றுநோய் கட்டி இருப்பதாக அறிவித்தார். எங்களிடமிருந்த அனைத்து பணத்தையும் வைத்து அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நாங்கள் அப்புறப்படுத்தினோம். அவன் ஆபத்திலிருந்து தப்பி விட்டான் என நாங்கள் நினைத்திருந்த நேரத்தில் விதி அவன் வாழ்வில் மீண்டும் விளையாடியது. 

குணாவுக்கு மீண்டும் அதிக காய்ச்சல் வர ஆரம்பித்தது. அவன் நகங்கள் மற்றும் தோல் கருமையாகி, கடும் வலிகளுக்கு ஆளானான். அவனது பரிதாப நிலையைக் கண்ட மருத்துவர், கீமோ தெரபி செய்யப் பரிந்துரைத்தார். அது அவனது அறிகுறிகளைக் குறைத்ததே அன்றி அவன் உடலில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து கீமோதெரபி மட்டும் போதாது என்று தெரிவித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

நானும் என் கணவரும் கூலி வேலை செய்து குறைந்த ஊதியத்தில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கே நாங்கள் போதுமான அளவு சம்பாதிக்கவில்லை. மருத்துவமனைக்கு முன்னும் பின்னுமாகப் பயணிப்பதால் நாங்கள் வேலை நாள்களை இழக்கிறோம். இதன் காரணமாக, தற்போது எங்கள் வருமானம் பூஜ்ஜியம் என்று தான் கூற வேண்டும்.  சிகிச்சைக்கான இந்த மிகப்பெரிய தொகையான 1,22,5000  ரூபாயை ஏற்பாடு செய்வது எங்களுக்குச் சாத்தியமற்றது. என் மகனின் வாழ்க்கை என்னையும் என் கணவனையும் சார்ந்துள்ளது என்பதையும், எவ்வளவு விரைவில் சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்ய முடியும் என்பதை நினைத்துப் பார்க்கையில் குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொள்கிறது. 

நான் முற்றிலும் உடைந்துவிட்டேன். எனது உதவியற்ற தன்மை மற்றும் வறுமை நிலை என்னை சுக்குநூறாக உடைக்கிறது. குணாவின் நம்பிக்கை மட்டுமே என்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அவன் எப்போதும் விளையாட்டுத்தனமான குழந்தையாக இருந்து வருகிறான். அவர் மிகவும் வேதனையிலிருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் என்னைத் தான் நன்றாக இருப்பதாக நம்ப வைக்க முயன்று கொண்டிருக்கிறான். 

எங்கள் பொருளாதார நிலை குணாவை ஒருபோதும் கவலைப்படுத்தியதில்லை. எங்கள் ஏழ்மையான வாழ்க்கை நிலையோ, சாதாரண பள்ளிக்கூடமோ அவனை நான்கு சுவருக்குள் அடைத்து வைத்ததில்லை. அவன் மிக ஆற்றல் கொண்ட அறிவுப்பூர்வமான குழந்தை. அவன் எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளைக் குணப்படுத்தும் மருத்துவராக என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளான். அவன் தனது கனவு வாழ்க்கையை அடைய முடியாமல் போனால் நான் என்னை ஒரு போது மன்னிக்க மாட்டேன். 

அவன் படுத்த படுக்கையாக இருந்தாலும் அதிலிருந்து தன்னை திசை திருப்ப வரைவதற்கு முயல்கிறான். என் வாழ்வில் இவ்வளவு தன்னம்பிக்கை கொண்ட தைரியமான குழந்தையை நான் கண்டதில்லை. 

குற்ற உணர்ச்சியின்றி இனி அவனை என்னால் கண்ணோடு கண் காண முடியாது. காலம் கடக்கும் முன் அவனைக் காப்பாற்ற எங்களுக்கு உதவுங்கள். உங்களுக்கு எங்கள் குடும்பமே வாழ் நாள் முழுவதும் கடன் பட்டிருக்கும்.

பொறுப்புத் துறப்பு: இதுவொரு, வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான தனியார் நிறுவனச் செய்தி, இதிலுள்ள விஷயங்களில் தினமணிக்கு எவ்விதப் பொறுப்புமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT