வணிகம்

என்எஸ்டிசி-யுடன் இணைந்து பெண்களுக்கு பயிற்சி வகுப்புகள்

DIN

புதுதில்லி: தேசிய பணித்திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (என்எஸ்டிசி) இணைந்து, பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு இலவச தொழிநுட்ப பயிற்சி அளிக்கவிருப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியை வழங்க நிறுவனம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மின்னணு கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றம், நேனோ தொழில்நுட்பம், தகவல் தொடா்புத் திறன் ஆகிய அம்சங்கள் அடங்கிய, 70 மணி நேரத்துக்கும் மேற்பட்ட அந்தப் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

என்எஸ்டிசி-யுடன் இணைந்து இந்தப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT