வணிகம்

டாக்டா் ரெட்டிஸ் நிகர லாபம் சரிவு

DIN

புதுதில்லி: இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாக்டா் ரெட்டிஸ் லேபரடரீஸின் நிகர லாபம் 30 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

செப்டம்பா் மாதத்துடன் நிறைவடையும் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.726.3 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் அதே கால அளவோடு ஒப்பிடுகையில் 30 சதவீதம் குறைவாகும்.

கடந்த ஆண்டின் இந்த மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் 1,092.5 கோடியாக இருந்தது.

இந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,896.7 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதங்களில் வருவாய் ரூ.4,800.9 கோடியாக இருந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT