வணிகம்

புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்திய நோக்கியா

27th Nov 2020 06:22 PM

ADVERTISEMENT

ஐரோப்பிய சந்தையில் தொழில்நுட்ப வர்த்தக நிறுவனமான நோக்கியா 7 புதிய ஸ்மார்ட் எல்இடி தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

32 இன்ச் முழு ஹெச்டி, 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 58 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் 4கே அல்ட்ரா ஹெச்டி வடிவ திரைகளை ஸ்டிரீம்வியூ மூலம் ஐரோப்பிய சந்தைக்கு நோக்கியா அறிமுகப்படுத்தியுள்ளது.

நோக்கியாவின் ஸ்மார்ட் தொலைக்காட்சி, செட் ஆப் பாக்ஸ் மற்றும் டிஏபி+ ரேடியோக்களை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்பனை செய்ய ஆஸ்திரியாவை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டிரீம்வியூ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி நோக்கியா ஸ்டிரீமிங் பாக்ஸ் 8000 உடன் தனது முதல் விற்பனையை ஸ்ட்ரீம்வியூ தொடங்குகிறது.

ADVERTISEMENT

புதிய நோக்கியா 32 இன்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி 399.90 யூரோவிற்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 43 இன்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி 549.90 யூரோவிற்கும்,50 இன்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி 699.90 யூரோவிற்கு விற்பனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 55 இன்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி 699.90 யூரோவிற்கும், 58 இன்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி 799.90 யூரோவிற்கும், 65 இன்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி 899.90 யூரோவிற்கும், 75 இன்ச் 4கே ஸ்மார்ட் தொலைக்காட்சி 1399.90 யூரோவிற்கும் விற்பனையாகும்.

புதிய மாடல்கள் ARM CA55 குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகின்றன. கிராபிக்ஸ் மாலி 470 எம்பி 3 ஜி.பி.யில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவியில் 32 இன்ச் மாடலைத் தவிர அனைத்து மாடல்களிலும் 1.5 ஜிபி ரேம் இணைந்து வருகிறது.

8 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் Android TV 9.0 இயக்க முறைமை கொண்டுள்ளது.

Tags : Nokia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT