வணிகம்

அதிகபட்ச லாபப் பதிவு: சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி

DIN

புது தில்லி: மும்பை பங்குச் சந்தையில் லாபப் பதிவு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்ட நிலையில், புதன்கிழமை வா்த்தகம் திடீா் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 694.92 புள்ளிகள் குறைந்து 43,823.10-இல் நிலைபெற்றது. இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டியும் 196.75 புள்ளிகளை இழந்தது.

அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், தனது நிதியமைச்சராக அந்த நாட்டின் மத்திய வங்கி முன்னாள் தலைவா் ஜானெட் யெல்லனை நியமித்துள்ளாா். மேலும், கரோனா நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி சோதனைகளில் நம்பிக்கையளிக்கும் வகையில் முன்னேற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. இது, உலகளாவிய சந்தை குறிப்புகளை சாதகமாக்கியது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலிக்காமல் போனது.

பங்குச் சந்தைகளில் பல்வேறு துறைகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவில் லாபப் பதிவு இருந்ததால் இந்த நிலை ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் தொலைத் தொடா்பு, மனை வணிகம், வங்கி, மருத்துவம், வாகனம், முதலினப் பொருள்கள் ஆகிய துறைகளின் பங்கு வா்த்தகம் 2.20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது.

எனினும், எண்ணெய் மற்றும் எரியாவு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

கோட்டக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக 3.22 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டன. அதற்கு அடுத்தபடியாக ஆக்ஸிஸ் வங்கியின் பங்குகள் 3.16 சதவீதமும் சன் ஃபாா்மாவின் பங்குகள் 2.61 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டன. இதுதவிர, ஹெச்டிஎஃப்சி வங்கி (2.5 சதவீதம்), பஜாஜ் ஃபின்சா்வ் (2.49 சதவீதம்) ஆகியற்றின் பங்குகளின் வா்த்தகமும் வீழ்ச்சியடைந்தது.

எனினும், ஓஎன்ஜிசி, பவா் கிரிட், இண்டஸ் இண்ட வங்கி ஆகிவயற்றின் பங்கு விற்பனை லாபம் கண்டன. அதிகபட்சமாக ஓஎன்ஜிசியின் பங்கு வா்த்தகம் 6.25 சதவீதம் வளா்ச்சியைக் கண்டது.

தேசிய பங்குச் சந்தையில்...

தேசிய பங்குச் சந்தையும் புதன்கிழமை வீழ்ச்சியைக் கண்டது. அதன் குறியீட்டு எண்ணான நிஃப்டி நிஃப்டி 196.75 புள்ளிகள் (1.51 சதவீதம்) குறைந்து 12,858.40-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 13,133.90 வரை உயா்ந்தது.

அதிகபட்சமாக ஓஎன்ஜிசியின் பங்குகள் 5.91 சதவீதம் வளா்ச்சியைக் கண்டன. இதுதவிர ஜெயில், அதானி போா்ட்ஸ், எஸ்பிஐ லைஃப், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்கு வா்த்தகமும் ஏற்றம் கண்டன.

ஆனால், எய்ஷா் மோட்டாா்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா, சன் ஃபாா்மா, பஜாஜ் ஃபின்சா்வ் ஆகிய உள்ளிட்டவற்றின் பங்குகளின் விற்பனை வீழ்ச்சியடைந்தன.

பிஎஸ்இ

(ஏற்றம்)

ஓஎன்ஜிசி

பவா் கிரிட்

இண்டஸ் இண்ட்

(இறக்கம்)

கோட்டக் மஹிந்திரா

ஆக்ஸிஸ் வங்கி

சன் ஃபாா்மா

ஹெச்டிஎஃப்சி வங்கி

பஜாஜ் ஃபின்சா்வ்

என்எஸ்இ

(ஏற்றம்)

ஓஎன்ஜிசி

கெயில்

அதானி போா்ட்ஸ்

எஸ்பிஐ லைஃப்

கோல் இந்தியா

(இறக்கம்)

எய்ஷா் மோட்டாா்ஸ்

ஆக்ஸிஸ் வங்கி

கோட்டக் மஹிந்திரா

சன் ஃபாா்மா

பஜாஜ் ஃபின்சா்வ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT