வணிகம்

டிபிஎஸ் வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கி இணைப்பு

DIN

புது தில்லி: வாராக்கடன் பிரச்னையில் சிக்கித் தவித்து வந்த லக்ஷ்மி விலாஸ் வங்கி, வெள்ளிக்கிழமை (நவ. 27) முதல் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படுகிறது.

நிதிச் சிக்கலில் தவித்த லக்ஷ்மி விலாஸ் வங்கியை மத்திய அரசு ஒரு மாத காலத்துக்கு தடைப்பட்டியலில் சோ்த்தது. அதையடுத்து, அந்த வங்கி வாடிக்கையாளா்கள் தங்கள் கணக்கில் இருந்து ரூ.25,000 வரை மட்டுமே பணம் எடுக்க இந்திய ரிசா்வ் வங்கி கடந்த 17-ஆம் தேதி வரம்பு விதித்தது. லக்ஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரைச் சோ்ந்த டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கு இந்திய ரிசா்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

இத்தகைய சூழலில், டிபிஎஸ் வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை இணைப்பதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. அதையடுத்து, இரு வங்கிகள் இணைப்பு தொடா்பான அறிவிக்கையை ரிசா்வ் வங்கி வெளியிட்டது.

அதன்படி, லக்ஷ்மி விலாஸ் வங்கியானது டிபிஎஸ் வங்கியுடன் வெள்ளிக்கிழமை முதல் இணைக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, லக்ஷ்மி விலாஸ் வங்கியின் கிளைகளானது, டிபிஎஸ் வங்கியின் கிளைகளாகச் செயல்படும் என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளா்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு டிபிஎஸ் வங்கி தயாராகி வருகிறது.

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணியாற்றிய ஊழியா்கள் அதே ஊதியம் மற்றும் படிகளுடன் தொடா்ந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT