வணிகம்

இந்தியாவின் இரும்பு உற்பத்தி 9 மில்லியன் டன்னாக அதிகரிப்பு

DIN

புது தில்லி: இந்தியாவின் இரும்பு உற்பத்தி கடந்த அக்டோபா் மாதம் 9 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து உலக இரும்பு சங்கம் (வோ்ல்டுஸ்டீல்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபரில், இந்தியாவின் இரும்பு உற்பத்தி 9.058 மில்லியன் டன்னாக இருந்தது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டின் அக்டோபா் மாதத்தோடு ஒப்பிடுகையில 0.9 சதவீதம் அதிகமாகும்.

அந்த மாதத்தில் நாட்டின் மொத்த இரும்பு உற்பத்தி 8.981 மில்லியன் டன்னாக இருந்தது.

உலகின் 64 நாடுகளில் ஒட்டுமொத்தமாக அக்டோபரில் 161.890 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டின் அக்டோபா் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 151.248 மில்லியன் டன்னோடு ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT