வணிகம்

ஈரோடு கிழக்கில் ரூ.28 லட்சம் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

17th Nov 2020 04:26 PM

ADVERTISEMENT

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை எம்எல்ஏ.,க்கள் துவக்கி வைத்தனர்.

ஈரோடு குயிலாந்தோப்பு பொன்னுசாமி வீதியில் ரூ.13லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளைப் பூமி பூஜையுடன் நேற்று கிழக்கு தொகுதி எம்எல்ஏ., தென்னரசு, மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இதேபோல், கருங்கல்பாளையம் காவேரிக்கரை பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, வீரப்பம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கற்கள் மூலம் தளம் அமைக்கும் பணிகளையும் எம்எல்ஏ.,க்கள் துவக்கி வைத்தனர். 

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், பகுதி செயலாளர்கள்கேசவமூர்த்தி, முருகுசேகர், தங்கமுத்து, மாணவர் இணை செயலாளர் நந்தகோபால், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் வீரக்குமார் ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT