வணிகம்

கூகுள் 2- ஜென் குரோம்காஸ்ட் அல்ட்ரா விரைவில் அறிமுகம்

13th Mar 2020 03:45 PM

ADVERTISEMENT

 

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட தேடுபொறி நிறுவனமான கூகுள் இரண்டாம் தலைமுறை க்ரோம்காஸ்ட் அல்ட்ராவை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது வெளிப்புற ரிமோட் மூலம் ஆண்ட்ராய்டு தளம் மூலம் இயக்கப்படும். இந்த சாதனம் 'சப்ரினா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 4கே எச்.டி.ஆர் உள்ளடக்கத்தை ஆதரிக்கும். அத்துடன் வழக்கமான புளூடூத் மற்றும் வைஃபை இணைப்பைக் கொண்டுள்ளது. 

தொலைதூரத்தில் மைக்ரோஃபோன் மற்றும் பயனர்களின் குரலுடன் இணைக்க முடியும். இந்த சாதனம் வழக்கமான 'ஜி 'லோகோவுடன் தற்போதைய குரோம்காஸ்ட் (Chromecast) அல்ட்ராவைப் போன்ற ஒரு HDMI இணைப்பைக் கொண்டிருக்கும்.

ADVERTISEMENT

கூடுதலாக, சாதனம் பயனர்களுக்கு யூடியூப் டிவி, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி +, ஹுலு மற்றும் பல பயன்பாடுகளுக்கு உதவும். இதன் விலை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும், கூகுள் பிக்சல் 4ஏ உடன் இதனை அறிமுகப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. 

இருப்பினும், கரோனா வைரஸ் (COVID-19) காரணமாக இந்த தயாரிப்பு சற்று தாமதமாக அறிமுகமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : google
ADVERTISEMENT
ADVERTISEMENT