வணிகம்

ஒன்பிளஸ் 8 சீரிஸ் அனைத்திலுமே 5ஜி தொழில்நுட்ப வசதி

13th Mar 2020 03:58 PM

ADVERTISEMENT

 

ஒன்பிளஸ் 8 தொடரின் ஒவ்வொரு சாதனமும் 5 ஜி தொழில்நுட்பத்துடன் இருக்கும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் தெரிவித்தார். 

வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் புதுவரவாக ஒன்பிளஸ் 8 சீரிஸ் அறிமுகமாக உள்ளது. 

அதன்படி,  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் கூறுகையில், 'ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே 5ஜி தொழில்நுட்பத்துடன் வரும். 5ஜி குறித்த எங்கள் நீண்ட கால முதலீட்டிற்கான உறுதிப்பாட்டை நான் மீண்டும் கூற விரும்புகிறேன். நாங்கள் பல ஆண்டுகளாக 5ஜி- யில் முதலீடு செய்து வருகிறோம். நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கான வழியாக இதனைப் பார்க்கிறோம். வரும் ஏப்ரல் மாதத்தில் இதனை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இருப்பினும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை' என்று தெரிவித்தார். 

ADVERTISEMENT

இதில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப், ஆண்ட்ராய்டு 10 தளம், இரட்டை பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, குவாட்-கேமரா அமைப்பு, எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் மூன்று லென்ஸ்கள் உள்ளிட்ட அம்சசங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : OnePlus
ADVERTISEMENT
ADVERTISEMENT