வணிகம்

மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது ஆபரணத் தங்கம்

8th Jan 2020 06:41 PM

ADVERTISEMENT

சென்னை: அமெரிக்கா-ஈரான் போா் பதற்றம் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் உயா்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.272 உயா்ந்து ரூ.31,176-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 3) புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, திங்கள்கிழமை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. திங்கள்கிழமை மாலையில், ஒரு பவுன் தங்கம் ரூ.31,168-ஆக இருந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அன்று தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயா்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.272 உயா்ந்து ரூ.31,176-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.34 உயா்ந்து, ரூ.3,897-க்கு விற்பனையானது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து ரூ.52.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து ரூ.52,100 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை உயா்வு குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் கூறியது:

ADVERTISEMENT

அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயா்ந்து வந்தது. தற்போது, அமெரிக்க படைகள் மீது ஈரான் படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதால், மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், பங்கு சந்தை முதலீட்டாளா்கள் தங்கத்தின் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனா். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயா்ந்து வருகிறது. வரும் நாள்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது என்றனா்.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,897

1 பவுன் தங்கம் ..................... 31,176

1 கிராம் வெள்ளி .................. 52.10

1 கிலோ வெள்ளி ................. 52,100

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,863

1 பவுன் தங்கம் ..................... 30,904

1 கிராம் வெள்ளி .................. 51.20

1 கிலோ வெள்ளி .................. 51,200

ADVERTISEMENT
ADVERTISEMENT