வணிகம்

ஃபிளிப்கார்ட் மூலம் ஹானரின் 9எக்ஸ் வரிசை செல்ஃபோன் இந்தியாவிலும் விற்பனை

8th Jan 2020 05:55 PM

ADVERTISEMENT


சீனாவில் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் ஃபிளிப்கார்ட் மூலமாக, தங்களது 9எக்ஸ் வரிசை செல்போன்களை இந்தியாவிலும் விற்பனை செய்யவுள்ளது.

ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது லேட்டஸ்ட் எக்ஸ் வரிசை ஸ்மார்ட்போன்களான ஹானர் 9எக்ஸ் விற்பனையை இதன் மூலம் இந்தியாவில் துவக்கியுள்ளோம். இந்த செல்ஃபோனில் முதல் முறையாக பாப்-அப் செல்ஃபி கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று ஹானர் இந்தியாவின் முதன்மை சந்தை மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட்ஃபோன் ஜனவரி 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 6 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இதனை 512 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT