வணிகம்

9 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் ஃபிங்கர்ஸ் வயர்லெஸ் ஹெட்செட்!

1st Jan 2020 11:04 AM

ADVERTISEMENT

 

சுமார் 9 மணி நேரம் தொடர்ந்து இயங்கக்கூடிய அழகான, ஸ்டைலான ஃபிங்கர்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் எஃப்எம் ரேடியோ செயல்பாட்டுடன் அறிமுகமாகியுள்ளது. 

இந்தியாவில் புதிய பிராண்டான ஃபிங்கர்ஸ் தனது புதிய வயர்லெஸ் ஹெட்செட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பியூட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெட்செட் வெறும் 150 கிராம் எடையுள்ளது. இலகுரகம் என்பதால் காதுகளில் அழுத்தத்தை கொடுப்பதில்லை. ஹெட்செட்டின் காதில் பட்டு போன்ற லெதர் பொருத்தப்பட்டுள்ளது.

ஹெட்செட் 200 mAh பேட்டரி உள்ள இதில் 1.5 மணி நேரம் சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் வரை தொடர்ந்து இயங்கக்கூடியது.

ADVERTISEMENT

இது புளூடூத் அல்லது ஆக்ஸ் மோடு ஆகிய இரண்டு வசதிகளும் உள்ளது. இதுதவிர, பயனர் கட்டுப்பாடு அழைப்பு உள்ளது. மேலும், வயர்லெஸ் ஹெட்செட் ஒரு உயர் தரமான 40 மி.மீ இயக்கி அலகுடன் பொருத்தப்பட்டுள்ளது.

வயர்லெஸ் ஹெட்செட் உங்களது எல்லா மனநிலைகளுக்கும் சரியான துணையாக இருக்கும். நேர்த்தியான, எளிமையான தோற்றம் மற்றும் அற்புதமான ஒலி தரத்துடன் இயங்கும் ஃபிங்கர்ஸ் ஹெட்செட் உணர்வுகளை ஈர்க்கும். எமரால்டு கிரீன், கிரே, மோச்சா மெரூன் மற்றும் பிரவுன் ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.1,899. ஃபிங்கர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT