வணிகம்

மார்ச் 5 முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி எம் 31

26th Feb 2020 01:53 PM

ADVERTISEMENT

 

சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட் போன் பிப்ரவரி 25 ஆம் தேதி அறிமுகமான நிலையில் மார்ச் 5ம் தேதி முதல் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு தனி எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில், கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் கடந்த ஆண்டு ஆன்லைன் பிரிவில் மிகப்பெரிய சந்தைப் பங்கைப் பெற உதவியுள்ளது.

கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 30,  2019ஆம் ஆண்டில் அதிக வருவாயை ஈட்டிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 25ம் தேதி அறிமுகமாகியுள்ளது. தொடர்ந்து, மார்ச் 5ம் தேதி முதல் அமேசான் தளத்திலும், சாம்சங் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வரவிருக்கிறது. 

கேலக்ஸி எம் 31 போன், 6 ஜிபி+64 ஜிபி மற்றும் 6 ஜிபி+128 ஜிபி என இரண்டு வகைகளில் நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் வருகிறது. அதிகபட்சமாக 64 எம்பி கேமரா மற்றும் 6,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டுள்ளது. 

அதன்படி, 64 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.15,999, 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.16,999 விலையில் அறிமுகமாகியுள்ளது. அமேசான் தளத்தில் அறிமுகச் சலுகையாக ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனால் ஆரம்ப விலையாக ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT