வணிகம்

மிக மோசமான நிறுவனம் 'சோமேட்டோ' - ஃபேர்வொர்க் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

18th Dec 2020 11:54 AM

ADVERTISEMENT

டிஜிட்டல் தளத்தில் சோமேட்டோ மிக மோசமாக செயல்படும் நிறுவனம் என ஃபேர்வொர்க் இந்தியா தரவரிசைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நியாயமான ஊதியம், சலுகைகள் உள்ளிட்ட தொழிலாளர்களுகளின் நிலையை கணக்கெடுக்கும் இங்கிலாந்தின் ஃபேர்வொர்க் இந்தியா தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட புள்ளிகளில் நகர்ப்புற நிறுவனம் ஒன்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக பிளிப்கார்ட்டின் டெலிவரி நிறுவனமான இ-கார்ட் நிறுவனம் 7 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது. 

அமேசான், பிக்பாஸ்கெட், ஓலா உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளன. 

ADVERTISEMENT

இந்த கணக்கெடுப்பில் மிகவும் குறைவான புள்ளிகளைப் பெற்று மிக மோசமான நிறுவனம் என சோமேட்டோ குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஃபேர்வொர்க் இந்தியா மதிப்பீடுகளில் மிக மோசமாக செயல்படும் டிஜிட்டல் தளம் என்ற முடிவுக்கு தான் முழுப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக சோமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் தெரிவித்துள்ளார். 

Tags : zomato
ADVERTISEMENT
ADVERTISEMENT