வணிகம்

2020 புத்தாண்டுக்கு ஜியோவின் புத்தம்புதிய சலுகைகள்

26th Dec 2019 08:03 AM

ADVERTISEMENT

 

ஒவ்வொரு ஆண்டும் ஜியோ ஏதாவது ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். அவ்வகையில் இந்தஆண்டு ஜியோ அறிவித்துள்ள திட்டத்தால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  2019-ம் ஆண்டு அன்லிமிடெட் ஆஃபர் அளித்தது. இது தீபாவளிக்கான சிறப்பு சலுகை. இதை அடுத்து மூன்று மாத இடைவெளியில் தனது அடுத்த சலுகையான 2020 நியூ இயர் ஆஃபரை அறிவித்துள்ளது ஜியோ. அதென்ன ஆஃபர்?

ஆஃபரின் பெயர் - 2020 ஹேப்பி நியூ இயர் ஆஃபர்

சிறப்பு -வாய்ஸ் கால், விடியோ கால், எஸ்எம்எஸ், ஜியோ சேவைகள் என  எல்லாமே அன்லிமிடெட். 

ADVERTISEMENT

இண்டர்நெட் டேட்டா - தினமும் 1.5 ஜிபி அதிவேக டேட்டாவை 365 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

விலை -  ரூ. 2, 020 மட்டுமே

ஜியோ ஃபோன் இதே போல் புதிய ஜியோபோனை 12 மாத திட்டத்துடன் ரூ.2020-க்கு வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று அறிவித்துள்ளது. இதில் தினமும் 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ஜியோ சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் பெறலாம். மேலும் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக, ஜியோ போன் வாங்க விரும்பும் புதிய ஜியோ சந்தாதாரர்களுக்கு 2020 ஜியோ போன் புத்தாண்டு சலுகையாக தரப்படுகிறது. இதில், அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளுடன் ரூ. 1,500 மதிப்புள்ள ஜியோ போன் மற்றும் 365 நாட்களுக்கு 0.5 ஜிபி தினசரி அதிவேக டேட்டா ஒதுக்கீடு ஆகியவை அடங்கும். 2020 ஜியோ போன் புத்தாண்டு சலுகையைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ செயலியும்  எஸ்எம்எஸ் செய்திகளும் கிடைக்கும்.

இந்த 2020 புத்தாண்டு சலுகை மற்றும் 2020 ஜியோ போன் புத்தாண்டு சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் குரல் அழைப்பு பலன்கள், ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் அழைப்புகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஜியோ அல்லாத எண்களுக்கு அழைக்கப்படும் அழைப்புகளுக்கு நியாயமான கட்டணம் பெறப்படும்.

இந்தச் சலுகைகள் போதுமா மேலும் வேண்டுமா என்று திகைக்கச் செய்துவிட்ட ஜியோவின் புத்தாண்டு ஆஃபர்கள் அதன் சந்தாதாரைக் கவர்ந்துவிட்டது என்றால் மிகையில்லை. மேலும் இது போன்ற சலுகைகள் தருவது குறித்து பல டெலிகாம் நிறுவனங்களிடையே கடுமையான போட்டி இருந்து வரும் நிலையில், ஜியோவின் இந்தப் புதிய திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT