வணிகம்

சூடாகிவிடுகிறதா உங்கள் ஸ்மார்ட்போன்? ரியல்மி அறிமுகப்படுத்துகிறது எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போன்

25th Dec 2019 01:03 PM

ADVERTISEMENT

 

ஷென்சென்னைச் சேர்ந்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி தங்களது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.  ஜனவரி 7 ஆம் தேதியன்று ரியல்மி,  தங்களது எக்ஸ் 50 5 ஜி-யை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

சார்ஜர் வசதிகள், செயலிகளின் பயன்பாடு உள்ளிட்ட பல முக்கியமான விபரங்களை இந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தக் கைபேசி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் ஒரே நேரத்தில் 5 ஜி மற்றும் வைஃபை இணைப்புகளை ஆதரிக்கும் மற்றும் மேம்படுத்தப்பட்ட VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வரும்,  அதாவது பேட்டரியை 30 நிமிடங்களில் 70 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும்.

ADVERTISEMENT

இந்தக் கைப்பேசியில் 6.44 அங்குல AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது சோனி IMX686 60MP + 8MP + 2MP + 2MP குவாட் பின்புற கேமராக்கள் மற்றும் 32MP + 8MP ட்யூவல் ப்ரெண்ட் பேஸிங் கேமராக்கள் உடையது.

மேலும் இது ஐந்து பரிமாண ஐஸ் கூல்ட் ஹீட் டிஸப்ஷன் என்ற அமைப்புடன் உருவாகப்பட்டுள்ளது, இந்த தொழில்நுட்பம் கைப்பேசி சூடாவதைத் தவிர்த்து, 100 சதவிகித பாதுகாப்பு வழங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT