வணிகம்

ஃபிட்பிட் வெர்ஸாவுக்கு போட்டியாக சீனாவின் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்சுகள்

16th Dec 2019 11:48 AM

ADVERTISEMENT

 

ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் ஃபிட்பிட் வெர்ஸா லைட் மிகவும் பிரபலமானது. இதன் விலை ரூ.13,799 ஆகும். இந்நிலையில், இதற்கு போட்டியாக சீனாவைச் சேர்ந்த ஹூமி நிறுவனம் அமேஸ்ஃபிட் வகை ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 50 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டன்ட் அம்சமும் கொண்டுள்ளது.

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் ஸ்மார்ட்வாட்ச்கள் 42 மி.மீ. மற்றும் 47 மி.மீ. என இருவகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விலை ரூ.10,999 ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 நாட்களுக்கு இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாட்டரியின் அளவு 410 எம்ஏஹெச் ஆகும். ஆமலோட் டிஸ்பிளேவில் 454x454 ஸ்கிரீன் ரெசல்யூஷனில் 326 பிபிஐ உடன் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

இதில் இதயத்துடிப்பு, ஃபிட்னஸ் டிராக்கிங், இசை மற்றும் வானிலை தகவல்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் டிஸ்ப்ளே உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் உருவமைப்பில் லெதர் ஸ்டிராப் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்டோர் மற்றும் அவுட்டோருக்கு ஏற்றவாறு திரையின் வெளிச்சம் தானாக மாறுபடும் வசதியும் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ஸ்போர்ட்ஸ், ரன்னிங், சைக்கிளிங், ஸ்விம்மிங், மௌன்டனீரிங், வொர்க்-அவுட் உள்ளிட்ட 12 வகை மோட்களுடன் இயங்கக்கூடியது. எனவே எந்த வேலையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் இதை அணிந்துகொண்டு தேவையான தகவல்களை பெறும் வசதியும் உள்ளது.

ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஆகிய இரு இயங்குதளங்களின் மூலமும் இயங்கக்கூடியது.

Tags : Amazfit GTR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT