வணிகம்

இந்தியாவில் மோட்டோராலா அறிமுகப்படுத்தும் மடக்கும் வகையிலான முதல் ஸ்மார்ட்போன்

16th Dec 2019 05:31 PM

ADVERTISEMENT

 

சென்னை: உலகப்புகழ் பெற்ற மோட்டோராலா நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக  தனது  மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது.

செல்போன் தயாரிப்பில் ஆரம்பம் தொட்டு புகழ்பெற்ற நிறுவனங்களில் மோட்டோராலாவும் ஒன்று. தற்போது செல்போன் மற்றும் கணினி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் லெனோவா நிறுவனம் அதனை வாங்கி விட்டது.  மோட்டோராலா நிறுவனமானது உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்த 'மோட்டோ ரேஸர்' என்று பெயரிடப்பட்ட, தனது மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை கடந்த நவமபர் மாதம் 14-ஆம் தேதியன்று அமெரிக்காவில் வெளியிட்டது. அமெரிக்க மதிப்பில் 1500 டாலர் (ரூ. 1, 06, 366) விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இந்த ஸ்மார்ட் போன், வரும் ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

இந்த போனின் சிறப்பம்சங்களாவான:

ஆக்ட்டா கோர் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் , 6 ஜிபி ராம், 16 மெகாபிக்ஸல் அளவு கொண்ட முதன்மை கேமரா, 5 மெகாபிக்ஸல் அளவு கொண்ட இரண்டாம் நிலை கேமரா, 6.2 பிக்சல் அளவுகொண்ட முதன்மை ஹெச்.டி மற்றும் ஓஎல்ஈடி டிஸ்பிளே.  அதேசமயம் இரண்டாம் நிலை டிஸ்ப்ளேவானது 2.7 இன்ச் அளவும் 600 X 800 பிக்சலும் கொண்டுள்ளது.        

இந்த போனானது  சாதாரண மற்றும் மடக்கப்பட்ட நிலையிலும் செயல்படும் விதமான பிங்கர் சென்சாரையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்ட்  9 பை ஓஎஸ்ஸை கொண்டுள்ள இந்த போனில் சிம்கார்ட் ஸ்லாட் என்று தனியாக ஒன்று  இல்லை. ஆனால் இது இ.சிம்கார்ட்டுகளின் வழியாகச் செயல்படும். அதேசமயம் 4 ஜி எல்டிஈ, வைஃபை உள்ளிட்ட இதர கனெக்டிவிட்டி வசதிகளையும் கொண்டுள்ளது. அதேசமயம் இந்த போனின் பேட்டரி அளவு 2150 எம்ஏஹெச் மட்டுமே கொண்டுள்ளது.    

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT