வணிகம்

ஃபாசில் நிறுவனத்தின் அசத்தலான ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச்!

16th Dec 2019 11:08 AM

ADVERTISEMENT

 

ஃபாசில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் நீண்ட ஆயுள் பேட்டரி மற்றும் ஸ்விம் - ப்ரூப் ஸ்பீக்கர் வசதி கொண்டது.

வியர்(Wear) ஓ.எஸ் மூலம் இயக்கப்படும் ஜென் 5 ஸ்மார்ட்வாட்சை ரூ.22,995 -க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது நீண்ட ஆயுள் பேட்டரி மற்றும் ஸ்விம் - ப்ரூப் ஸ்பீக்கர் வசதி கொண்டது. 

கூகுளின் வியர்(wear) ஓ.எஸ் பொதுவாக பல ஸ்மார்ட்வாட்ச்களுடன் தொடர்புடையதாக இருக்காது. இருப்பினும், இந்த ஸ்மார்ட் வாட்ச் தொழில்நுட்ப விரும்பிகளுக்கு மிஸ்ஃபிட் என்ற பிராண்டை நினைவுபடுத்த வாய்ப்புள்ளது. 

டெக்சாஸை தளமாகக் கொண்ட ஃபாசில் நிறுவனமானது கூகுளின் வேர்(wear) ஓ.எஸ்ஸூடன் இணைந்து பல ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதன் ஸ்மார்ட்வாட்சுகளின் புது வடிவத்தை உருவாக்கி வருகிறது.

ADVERTISEMENT

சாம்சங் ஸ்மார்ட்வாட்சுகளை ஒப்பிடுகையில் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது ஜென் 5 வாட்ச்.

ஃபாசில் 'கார்லைல்' ஸ்டைல் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் வழக்கமான ஆண்களுக்கான வாட்ச் ஆகும். ஆனால் ஜென் 5 வாட்ச் ஒரு 1.28-இன்ச் அமோல்டு திரை 328ppi பிக்சல் அடர்த்தி மற்றும் வலது பக்கத்தில் மூன்று புஷர்களைக் கொண்டுள்ளது. நடுவில் சுழலும் கிரீடம் உள்ளது. பார்ப்பதற்கு அழகாகவும் கூர்மையாகவும் இருக்கிறது.

ஃபாசில் ஜென் 5 ஒரு குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3,100 சிப்-யை கொண்டுள்ளது, இது பேட்டரி ஆயுளுக்கு உதவுகிறது. நீண்ட காலம் உழைக்கும் தன்மை உடையது. 

இதில் உள்ள ஸ்பீக்கர் கூகுள் உதவியை பயன்படுத்துவதில் உதவுகிறது. மேலும், கடிகாரத்திலிருந்து அழைப்புகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பன்முகத்திறன் கொண்டது. 

வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப வாட்சின் பட்டைகளை மாற்றிக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT