வணிகம்

பில்போர்டு 200 பட்டியலில் இனி இவை இடம்பெறும்

16th Dec 2019 10:45 AM

ADVERTISEMENT

 

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் தளத்திலிருந்து விடியோ மற்றும் ஆடியோ தரவுகளும், பல மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளின் காட்சி நாடகங்களும் விரைவில் பில்போர்டு 200 ஆல்பங்கள் பட்டியலில் இடம்பெறும் என்று பில்போர்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

யூடியூப்பைத் தவிர, ஸ்பாட்ஃபை, ஆப்பிள், டைடல் மற்றும் வேவோ போன்றவற்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற்ற விடியோ ஜனவரி 3, 2020 முதல் பில்போர்டில் சேர்க்கப்படும்.

விடியோ ஸ்ட்ரீம்கள் பில்போர்டின் பல பாடல்களின் குறிப்பிட்ட தரவரிசைகளில் 2013 முதல் கணக்கிடப்பட்டுள்ளன, ஆனால் அவை அந்தந்த ஆல்பங்கள் தரவரிசையில் இணைக்கப்பட்டிருக்கவில்லை. பில்போர்டின் பாரம்பரிய இசைத் தொகுப்பு அவர்களின் வெற்றியின் முக்கிய காரணம் எனலாம். பில்போர்டு 200 ஆல்பங்கள் தரவரிசையில் விடியோ தரவைச் சேர்ப்பது என்பது ஆடியோ ஸ்ட்ரீம்கள் சேர்க்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு வந்துள்ளது. இது விற்பனையிலிருந்து நுகர்வோருக்காக மாற்றப்படுவதைக் குறிக்கிறது என்று ஆன்லைன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ஆனால் இப்படி விடியோவைச் சேர்ப்பது ஆர் & பி , ஹிப்-ஹாப், லத்தீன் உள்ளிட்ட பில்போர்டின் பயனர் நாடுகள் சிலவற்றை பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யூடியூப்பில் இசைப் பிரிவின் தலைமை அதிகாரியான லியோர் கோஹன் கூறுகையில், 'இந்த மாற்றங்களை மக்கள் கேட்டு ரசிக்கும் விஷயங்களை வழங்குவதில் இது மிக முக்கியமானத் தருணம்" என்று கூறியுள்ளார்
 

Tags : billboard
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT