தொழில் மலர் - 2019

கொடைக்கானல் சர்வதேசப் பள்ளியில் உலகளாவிய கண்ணோட்டத்துடன் கல்வி !

16th Oct 2019 01:00 PM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அமைந்துள்ள கோடை சர்வதேசப் பள்ளி (கே.ஐ.எஸ்.), கடந்த 1901 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, நூற்றாண்டு விழா கண்டுள்ளது இப்பள்ளியில் உலகளாவிய கண்ணோட்டத்துடன் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
 இது குறித்து இப்பள்ளியின் முதல்வர் கோரி தெரிவித்ததாவது: இங்கு பயிலும் பல்வேறு கலாசாரங்கள் மற்றும் பண்பாட்டுப் பின்னணிகளைக் கொண்ட மாணவர்களை, இன்றைய சமூகத்துக்கு தேவையான குடிமக்களாக உருவாக்கி வருகிறோம். மேலும், ஆழ்ந்த கற்றல் மற்றும் விமர்சன சிந்தனையை வலியுறுத்தியும், கலை, இசை, விளையாட்டு, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்தி வருகிறோம்.
 சர்வதேச அளவிலான (ஐபி) பாடத்திட்டம் இப்பள்ளியின் முக்கிய அம்சமாகும். கடந்த 1976 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சர்வதேச இளங்கலை பட்டயத் திட்டம் மூலம், இந்தியாவின் முதல் ஐ.பி. பள்ளியாக (ஆசியாவில் 3-ஆவது) இப்பள்ளி உருவானது.
 ஒரு சர்வதேச குடியிருப்பு சமூகம்: பள்ளியின் மாணவர் சமூகம், சுமார் 25 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 450-க்கும் மேற்பட்டோரைக் கொண்டுள்ளது. ஒரு சமூகமாக கற்றுக்கொள்வதில் நமது பலம் மேலும் வளர்ச்சிப் பெறும். கலாசாரம், தனித்துவமான நம்பிக்கை மற்றும் உலகெங்கும் பரவியுள்ள பல்வேறு அனுபவங்களின் தொகுப்பில் ஒன்றாக வாழமுடியும். ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள பள்ளிகளுடனான மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
 எங்கள் மாணவர்கள் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அனுபவங்களின் (மாதிரி ஐக்கிய நாடுகள் சபை போன்றவை) அடிப்படையில், பன்முக பரிமாற்றங்கள், மாநாடுகள் மற்றும் போட்டிகளிலும் பங்கேற்கின்றனர்.
 வாழ்க்கைக்கு தகுதியானவர்: கொடைக்கானல் சர்வதேச பள்ளியானது, ஏ-நிலை சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ மற்றும் ஓ-நிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை வரவேற்கிறது.
 கடந்த 1976 ஆம் ஆண்டில் ஐ.பி. பாடத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட இந்தியாவின் முதல் பள்ளியானது முதல், இப்பள்ளி ஐ.பி. மதிப்பெண்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கு போதுமான கற்றல் ஆதரவையும், வளங்களையும் வழங்குவதுடன், வாழ்க்கைக்குத் தகுதியானவர்களாக மாற்றுகின்றனர்.
 இங்கு, ஐ.பி. டிப்ளமோவை தேர்வு செய்த மாணவர்கள், உடற்கல்வி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நிகழ்காலத்து கலைகளில் அதிக ஈடுபாடு உடையவர்களாக விளங்குகின்றனர்.
 வகுப்பறைக்கு அப்பால்...: பாரம்பரிய வகுப்பறை கற்பித்தல் மற்றும் கற்றல் என்பது எங்கள் பள்ளியின் ஒரு அம்சம் மட்டுமே. உலகுக்குத் தேவையான தலைவர்களை வளர்ப்பது பட்டயம், பட்டம் மற்றும் சான்றிதழ்களுக்கு அப்பாற்பட்டது. இங்கு, ஒரு நியாயமான, நிலையான மற்றும் அமைதியான உலகுக்கான மனிதர்களையும், அக்கறையுள்ள தூதர்களையும் கவனித்து, அவர்களைப் போன்ற தலைவர்களாக மாற்றுவதற்கு எங்கள் மாணவர்களுக்கு அதிகாரம் அளித்து ஊக்குவிக்கிறோம்.
 மேலும், இப்பள்ளியிலுள்ள கற்றல் திட்டங்கள், மாணவர்களை கல்வி ரீதியாக மட்டுமின்றி, கலாசார ரீதியாகவும், திறமையான ஆளுமைகளாகவும் உருவாக்குகின்றன. விமர்சன சிந்தனை, நெறிப்படுத்தும் ஆற்றல், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்டவை எங்கள் பட்டதாரியின் அடையாளங்கள்.
 கொடைக்கானல் மலைவாசஸ்தலம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழலின் இணையற்ற அனுபவத்தையும், இயற்கையுடனான அசாதாரண சாகசங்களையும் வழங்குகிறது. வெளிப்புறத் திட்டம் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளி கல்வியின் பிரதான அம்சமாக இருந்து வருகிறது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ஆராய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
 எங்கள் பள்ளியில் வழங்கப்படும் கலை நிகழ்ச்சிகள் பாடத்திட்டத்தின் தனித்துவமான அம்சமாகும். எங்கள் பள்ளியைச் சேர்ந்த பழைய மாணவர்களில் பலர் வெள்ளித்திரை மற்றும் சின்னத் திரைகளில் புகழ்பெற்ற கலைஞர்களாகவும், தொழில்முறை இசைக் கலைஞர்களாகவும் உயர்ந்துள்ளனர் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT