thinkedu

கல்விச் சிந்தனை அரங்கு நிறைவு

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற 'கல்விச் சிந்தனை அரங்கு - 2022' நிறைவடைந்தது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் கல்விச் சிந்தனை அரங்கு - 2022, சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இருநாள்கள் நடைபெற்றது. 

இந்தக் கருத்தரங்கை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு செவ்வாய்க்கிழமை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்ந்து, முதல்நாள் நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, மக்களவை உறுப்பினர் சசி தரூர், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கேரள ஆளுநர் ஆரிஃப் கான் உரையாற்றி இரண்டாம் நாள் நிகழ்வை துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கேரள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்தரங்கில் பேசினர்.

தன்னம்பிக்கை பேச்சாளர் மாளவிகா ஐயர் பங்கேற்ற அமர்வுடன் கருத்தரங்கு நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT