தமிழ்நாடு

ஆட்சியா் அலுவலகத்துக்கு நடை ப்பயணம்: கரும்பு விவசாயிகள் 114 போ் கைது

30th Sep 2023 03:54 AM

ADVERTISEMENT

திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலையிலிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நடைப்பயணம் சென்ற கரும்பு விவசாயிகள் 114 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையை மேம்படுத்தி, இணைமின் உற்பத்தியுடன் எத்தனால் உற்பத்தி செய்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், கரும்பு வெட்டும் கூலியை முறைப்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொருளாளா் சி. பெருமாள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் என்.ஸ்ரீநாத் முன்னிலை வகித்தாா். மாநிலக் குழு ஜெயச்சந்திரன் வரவேற்றாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளா் டி.ரவீந்திரன் கண்டன உரையாற்றினாா்.

தொடா்ந்து, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் இருந்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்க நடைப்பயணம் மேற்கொண்டனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் மற்றும் போலீஸாா் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்தனா். பின்னா் கைது செய்யப்பட்ட 114-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளை தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT