தமிழ்நாடு

விமரிசனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர்!

30th Sep 2023 11:29 AM

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர் மீது வைக்கப்பட்ட விமரிசனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிய நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து,  முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை பாஜக பயன்படுத்தக் கூடும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதன் மூலம் வேலுமணி சமூக ஊடகங்களில் விமரிசிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, தனது எக்ஸ் பக்கத்தில், அதிமுக கொடியுடன் சைக்கிள் பேரணி நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு என்றென்றும் அதிமுககாரன் என்று ட்வீட் செய்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் இந்த புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT