தமிழ்நாடு

திருமயம் அருகே ஆம்னி பேருந்து, லாரி, இருசக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி

30th Sep 2023 01:09 PM

ADVERTISEMENT


திருமயம்: திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் கோட்டை அருகே சென்னையில் இருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்துடன், லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மோதியதில், பேருந்து சாலாயோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு காரைக்குடிக்கு வந்த ஆம்னி பேருந்து  திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் கோட்டை வழியாக சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது போது திருமயம் நகருக்கு பிரியும் பகுதியில் லாரியை முந்திச் செல்ல முயன்ற போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியும் எதிர்பாராத விதமாக திருமயம் நகருக்குள் செல்லும் சாலையில் திரும்பியபோது பேருந்து லாரி மீது மோதியது. அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து ஏறி இறங்கி அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. சாலையின் இடது புறம் உள்ள பள்ளத்தி லாரி  விழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த  சேலை வியாபாரி காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையும் படிக்க | எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக  அனுப்பி வைத்தனர். பேருந்தில் சிக்கிக் கொண்டவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். இதில் பேருந்தில் இருந்த பயணிகளில் 5 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது மற்ற பயணிகள் அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். 

காயம் அடைந்தவர்கள் திருமயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இது குறித்து திருமயம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT