தமிழ்நாடு

குறைக்க வேண்டியது வேகத்தை அல்ல, வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தை: அமைச்சர் உதயநிதி

30th Sep 2023 09:25 PM

ADVERTISEMENT

குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இதையும் படிக்க-'வந்தே பாரத்'துக்குப் பலியாகும் வைகை எக்ஸ்பிரஸ்!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது எனும் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர்.

ADVERTISEMENT

குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT