தமிழ்நாடு

உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு

30th Sep 2023 11:42 AM

ADVERTISEMENT

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில், அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்துக்கு சொத்து சோ்த்ததாக அமைச்சா் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு வேலூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை’ எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து கடந்த ஜூன் 28-ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதையும் படிக்க | மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறினாலும் அமலுக்கு வர பல ஆண்டுகள் ஆகும்: ப.சிதம்பரம்

ADVERTISEMENT

இந்த தீா்ப்பை எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பில் இதுவரை சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், குற்ற விசாரணை சட்டம் 391- ஆவது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்காக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்தார். 

இந்நிலையில் நீதிபதி வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்ததற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT