காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4524 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 37.87அடியிலிருந்து 37.50 அடியாக சரிந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,299 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,524 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | வருமானமின்றி தவிக்கும் வயதானவா்கள்; வருங்கால இந்தியாவில் முதியோரின் நிலை?
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 10.83 டிஎம்சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின்நீர்மட்டம் சரியா தொடங்கியுள்ளது.