தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

30th Sep 2023 08:54 AM

ADVERTISEMENT

 


கம்பம்: அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக, சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை மாலையில் பெய்யத் தொடங்கிய மழையால் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 25.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 26.2 மி.மீ., மழையும் பெய்தது. அதனால் அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 509.17 கன அடி வந்தது.

இந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால், வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 25.4 மி.மீ மழையும், தேக்கடி ஏரியில் 26.2. மி.மீ மழையும் பெய்தது. இதனால் அணைக்கு சனிக்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 822.36 கன அடியாக  வந்தது. 

ADVERTISEMENT

அணை நிலவரம்
அணையின் நீர்மட்டம் 119.65 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 2,565 மில்லியன் கன அடி, நீர் வரத்து வினாடிக்கு 822.36 கன அடி, தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 400 கன அடியாக உள்ளது.

இதையும் படிக்க | அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

ADVERTISEMENT
ADVERTISEMENT