தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று காற்றுடன் கனமழை பெய்தது வருகிறது.
குறிப்பாக அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், அண்ணாநகர், பாடி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, அடையாது, மடிப்பாக்கம், நங்கநல்லூர், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
கனமழையால் சாலையெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறதால் அக்.5 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.