தமிழ்நாடு

எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

30th Sep 2023 12:17 PM

ADVERTISEMENT

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், நாட்டின் பசுமைப் புரட்சியின் முக்கிய சிற்பியுமான பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக, வியாழக்கிழமை காலை (செப்டம்பர் 28) 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

அவரது மறைவுக்கு பிரதமர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க | அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணமா?

ADVERTISEMENT

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதனின் அறக்கட்டளையில் அவரது உடல், நேற்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என். ரவி, நேரில் சென்று எம்.எஸ்.சுவாமிநாதனின் உடலுக்கு மலரவளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT