அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (மாலை 6.30 வரை) திருவள்ளூர், சேலம், ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மகளிர் இடஒதுக்கீடு மசோதா வெறும் வாக்குறுதி தான்: கார்கே தாக்கு!
மேலும் திருப்பத்தூர், கோவை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.