தமிழ்நாடு

தொடர் விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே செப்.30ல் சிறப்பு ரயில் 

28th Sep 2023 07:45 PM

ADVERTISEMENT

இந்த வார இறுதியில் தொடர்ச்சியான விடுமுறை காரணமாக  தாம்பரம் - திருச்சி இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

வரும் 30 ஆம் தேதி தாம்பரத்தில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை மறுநாள்(அக்.1) காலை 6.10 மணிக்கு திருச்சி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மறுவழித்தடத்தில், திருச்சியில் இருந்து அக். 1 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள்(அக்.2) காலை 6.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT

இதையும் படிக்க: முதல்வர் வேட்பாளர் விவகாரத்தால் கூட்டணி முறிவு: ஓபிஎஸ் அணி

இதற்கான முன்பதிவு இன்று(செப்.28) தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT