தமிழ்நாடு

சென்னை தி.நகர் சாலையில் திடீர் பள்ளம்!

28th Sep 2023 09:09 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை தி.நகர் அருகே சாலையில் இன்று அதிகாலை திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவுகிறது.

தி.நகர், பாண்டி பஜார் அருகேவுள்ள நாயர் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சுமார் 3 அடி அகலமும், 10 அடி ஆழமுடைய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளத்தை சுற்றியும் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப் பாதையில் போக்குவரத்து காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க | ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்!

முதல்கட்ட தகவலில், அப்பகுதியில் நடைபெறும் கழிவு நீர் கால்வாய் பணியால் பள்ளம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT