தமிழ்நாடு

எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு 

28th Sep 2023 06:18 PM

ADVERTISEMENT


சென்னை: வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், நாட்டின் ‘பசுமைப் புரட்சி’யின் முக்கிய சிற்பியுமான பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன்(98) வயதுமூப்பு காரணமாக, வியாழக்கிழமை காலை (செப்டம்பர் 28) 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் பிரதமர், முதல்வர், கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க | பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

ADVERTISEMENT

இந்த நிலையில், வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள ஆணையில், நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார்.

படிக்க எம். எஸ். சுவாமிநாதன்: இந்திய பசுமை புரட்சியின் தந்தை!

சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசண், பத்ம விபூசண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சுவாமிநாதன் பெற்றுள்ளார்.

உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் -வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT