தமிழ்நாடு

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி!

28th Sep 2023 03:28 PM

ADVERTISEMENT

 

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
சிவராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த அபிநிதி திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 23-ம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. 

பின்னர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி செப்.27-ம் தேதி இரவு உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

படிக்க: ம.பி.: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு உதவிய சாமியார்!

ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT