தமிழ்நாடு

கர்நாடகத்தில் நாளை பந்த்: தமிழக எல்லை வரை பேருந்துகள் இயக்கம்

28th Sep 2023 08:19 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் நாளை(செப்.29) நடைபெறும் முழு அடைப்பு காரணமாக, தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவதைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் கா்நாடக விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சாா்பில் முழு அடைப்பு நடைபெறவுள்ளது.

பெரும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்பொருட்டு இன்று நள்ளிரவு முதல் நாளை(செப்.29) நள்ளிரவு வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: தொடர் விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே செப்.30ல் சிறப்பு ரயில் 

ADVERTISEMENT

இந்த நிலையில், இருமாநில எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலையைப் பொருத்து பேருந்து சேவை தொடரும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT