திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் கிராமம் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்துக்கு அருகே புதிதாக டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த டைடல் பூங்காவில் ரூ. 600 கோடி மதிப்பில் 10,000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் அலுவலகமும், கூட்ட அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க | சோகத்தில் முடிந்த திருமணம்: தீ விபத்தில் 100 பேர் பலி; பலர் படுகாயம்!
இதற்கான டெண்டரை வெளியிட்டுள்ள தமிழக அரசு, அக்டோபர் 26-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதம் தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.