தமிழ்நாடு

பூண்டி ஏரியில் 2,500 கன அடி உபரிநீர் திறப்பு: கொசஸ்தலையாறு கரையோரமக்களுக்கு எச்சரிக்கை

27th Sep 2023 10:51 AM

ADVERTISEMENT


திருவள்ளூர்: பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி புதன்கிழமை 2 மதகுகள் வழியாக 2,500 கன அடி உபரிநீா் திறந்தவிட்டப்பட்டதை அடுத்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து வருவதை அடுத்து கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் அருகே சென்னையின் குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி நீா்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நீா்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாகும்.

இதன் முழுக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். இந்த நிலையில் நீா் இருப்பு 34 அடியாகவும், கொள்ளளவு 2,823 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அதோடு பூண்டிக்கு மழை நீா்வரத்து 2,210 கன அடியாக உள்ளது.

இதையும் படிக்க | சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறையினர் சோதனை!

ADVERTISEMENT

தற்போது ஏரியின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீா்வரத்து தொடா்ச்சியாக உள்ளதாலும் நீா்த்தேக்கத்தின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. இதற்கிடையே நீா்த்தேக்கத்துக்கு வரும் நீா் வரத்து 34 அடியை தொட்டுவிடும் எனக் கருதப்படுவதால் வெள்ளநீா் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீா் திறக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

அதன்பேரில்  திங்கள்கிழமை மாலை(செப். 25) 4 மணி அளவில் ஏரியின் 3,12 ஆகிய மதகுகள் வழியாக தலா 500 கன அடி வீதம்  உபரி நீர் திறந்து விடப்பட்டன.

இந்த நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி பூண்டி ஏரிப்பகுதியில் 97 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதனால் இந்த ஏரிக்கு வரத்துக்கால்வாய்,கிருஷ்ணா கால்வாய்களில் நீர் வரத்தால் 34.25 அடியாக அதிகரித்துள்ளது. அதனால் உபரிநீர் திறப்பை அதிகரிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.  

அதைத்தொடர்ந்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் ஏரியின் 3,12 ஆகிய மதகுகள் வழியாக தலா 500 கன அடி வீதம் உபரி நீரை திறந்துவிடப்பட்டது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் நீா் சீறிப் பாய்ந்தது. நீா்த்தேக்கத்துக்கு வரக்கூடிய நீா்வரத்து தொடா்ந்து அதிகமாகும் நிலையில் கூடுதல் உபரி நீா் படிப்படியாக திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி புதன்கிழமை 2 மதகுகள் வழியாக 2,500 கன அடி உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் சீறிப்பாய்ந்தது. 

இதைத்தொடர்ந்து கொசஸ்தலையாறு ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூா், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூா், வெள்ளியூா், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துா், பண்டிக்காவனுா், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூா், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகா், சடையான்குப்பம், எண்ணுா் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும், பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT