தமிழ்நாடு

பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

27th Sep 2023 06:01 PM

ADVERTISEMENT

பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடைய சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரையிலிருந்து செப்.29-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் (எண்: 06033) நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும், மறுதடத்திலிருந்து இந்த ரயில் (எண்: 06034) செப்.30-ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.

ADVERTISEMENT

இந்த ரயில் சென்னை கடற்கரையிலிருந்து வேலூா் கண்டோன்மென்ட், கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தேசத்திற்கு சேவை செய்ய தில்லி எப்போதும் தயாராக இருக்கும்: கேஜரிவால்

ADVERTISEMENT
ADVERTISEMENT