தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,231கன அடி!

27th Sep 2023 09:06 AM

ADVERTISEMENT


மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,943 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,231 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 37.91அடியிலிருந்து 38.02 அடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க | திம்பம் மலைப் பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.09 டிஎம்சியாக உள்ளது.

ADVERTISEMENT

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT