தமிழ்நாடு

காவிரி விவகாரம்: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

27th Sep 2023 03:50 PM

ADVERTISEMENT

காவிரி விவகாரத்தில் மக்களிடையே வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருப்பதாவது:

காவிரி நதி நீர் பிரச்னை சம்பந்தமாக பல்வேறு சமூக ஊடகங்களில் சிலர் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய விடியோக்கள் மற்றும் போஸ்டர்களை பயன்படுத்தி, தற்போது நடந்தவை போல சித்தரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.

இத்தகைய வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.

ADVERTISEMENT

இவ்வாறான வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு

மேலும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT