தமிழ்நாடு

கர்நாடக மக்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

27th Sep 2023 02:12 PM

ADVERTISEMENT

சேலம்: முதல்வரின் உருவப்படத்தை வைத்து விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட கர்நாடக அமைப்பினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலம் வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பெத்தநாயக்கன்பாளையத்தில் திடலை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

முதல்வரின் உருவப்படத்தை வைத்து விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட கர்நாடக அமைப்பினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணிநியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

ADVERTISEMENT

அதிமுக-பாஜக கட்சிகளுக்கு இடையே பிளவு ஏதும் இல்லை; அவர்கள் நடிக்கிறார்கள். 

திமுக கூட்டணி ஒரு கொள்கை கூட்டணி. மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர்

சேலம் இளைஞர் அணி மாநாடு இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத வகையில் இருக்கும். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மூன்று லட்சம் பேர் அமரக்கூடிய அளவில் மாநாட்டுகான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இளைஞரணி மாநாட்டில் திராவிட இயக்கத்தின் கொள்கைகள், வரலாறுகள் மற்றும் அரசின் சாதனைகள் குறித்து பேசப்படும் என்று உதயநிதி தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT