தமிழ்நாடு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 - 5 வகுப்புகளுக்கு விடுமுறை

26th Sep 2023 08:03 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று (26.09.2023) ஒரு நாள் விடுமுறை  என  மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க: தங்க வேட்டையை தொடங்கியது இந்தியா

ADVERTISEMENT

அதன்படி, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வேலூரில் சில இடங்களில் சாரல் மழை பெய்ததைத் தொடா்ந்து பலத்த மழையாக உருவெடுத்தது. தொடா்ந்து இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை மழை பெய்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT